ஆலயத்தின் தூயவர் --- புனித அருளானந்தர்
கத்தோலிக்க மக்கள் --- திருத்தலம் ஆகவே இங்கேயே தங்கியிருப்போர் சுமர் 19 பேர்
மறை வரலாறு
Sevalaperi Church
1961இல் அருள்பணி. அருளானந்தம் முயற்சியில் 14 குடும்பங்கள் கத்தோலிக்க கிறித்தவ மறையை தழுவின. இவரது முயற்சிக்கு பெரிதும் உறுதுணையாய் இருந்தவர்கள் திரு இதய துறவுச் சமூகத்தை சார்ந்த சகோ. சூசை அய்யா மற்றும் சகோ. மரிய அய்யா ஆவர்.
தூய அருளானந்தரை (ளுவ. துழாn னுந டீசவைவழ) பாதுகாவலராக கொண்ட இந்த ஊரின் கோவிலை மதுரை உய்h மறைமாநில பேராயர் மேதக சசுடின் திரவியம் அவாகள் 11.10.1967 இல் அடிக்கல் நாட்டி அவரே 04.05.1971 அன்று வழிபாட்டிற்கு அருள்பொழிவு செய்திருக்கிறார்கள. மேலும் அருள்பணி அருளானந்தம் கோவிலைச் சுற்றியுள்ள 4 ஏக்கர் நிலத்தை கோவிலுக்காக வாங்கினார்.
ஆனால் இன்று இரண்டு குடும்பங்களே இங்கு கத்தோலிக்க கிறித்தவ மறையில் வாழ்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
அத்தணை கிளை பங்குத்தளங்களிலும் மிகச் சிறப்பாக எல்லா ஆன்மீக நிகழ்வுகளும் நடந்துக் கொண்டிருக்கின்றன. சிறுவர்களுக்கான ஞாயிறு வகுப்புகள், இளைஞர் பாசறை, கலைகள் கற்பித்தல், மறைக்கல்வி வகுப்புகள் சிறப்பாக நடந்துக் கொண்டிருக்கின்றன.