ஆன்மீக & வாழ்வியல் வழிகாட்டுதல்

Home >  Spiritual Direction >  Spiritual Direction

ஒவ்வொரு திங்களும், வியாழனும் பக்தர்களுக்கு அருள்பணி. அந்தோனிமுத்து அவர்கள் ஆன்மீக வழிகாட்டுதல் பயிற்ச்சிகள் நடத்துகிறார்கள். இதில் பெரும்பாலும் கிறித்தவரல்லாதோரும், கிறித்தவராக மாற விரும்புகிறவர்களும் கலந்து கொள்கின்றனர். சுமார் ஆறு மாத பயிற்ச்சிக்கு பின்னர் தங்களது மனமுவுந்த, சுதந்திரமான ஒப்புதலை தந்த பின்னர் இவாகளுக்கு திருமுழுக்கு தரப்படுகின்றது. பின்னர் இவர்களுக்கு தொடர் பயற்ச்சியும் தரப்படுகின்றது.

வாழ்வியல் வழிகாட்டுதல் கத்தோலிக்க கிறித்தவரல்லாதோருக்கு வாழ்வியல் வழிகாட்டுதலும், ஆன்மீக வழிகாட்டுதலும் நடத்தப்படுகின்றன. இங்க வருகின்ற பெரும்பாலான பக்தர்கள் ஏதாவதொரு வகையில் மன ரீதியில் பாதிக்கபட்டுள்ளனர். வாழ்வில் வரும் துன்பங்கள், நெருக்கடிகள், வேதனைகள், சோதனைகள், நீங்கா நோய்கள் அவாகளை ஆக்கபூர்வமான தீர்வுகளை எடுக்க தடைகளாக இருக்கின்றன. அப்போது அவர்கள் போதைக்கும், குடிப் பழக்கத்திற்கும் அடிமையாகி போவதே அவாகளுக்கு தெரிந்த பாதை. அந்நேரத்தில் அவர்களுக்கு தேவை ஆற்றல் தருகின்ற வார்த்தைகளும், தீர்வு காண்கின்ற வழிகளும், இதன் மூலம் நம்பிக்கை ஊட்டுகின்ற இறைவனின் உடனிருப்புமே. இதனையே இங்குள்ள அருள்பணியாளர்கள் செய்து வருகின்றனர்.