விற்று வாங்கல்

Home >  Selling And Buying

குழந்தைகள் சில குடும்பங்களில் பிறந்து இறந்து விடுவது மருத்துவம் வளர்ந்த காலத்திலும் சரி, முன் காலத்திலும் சரி அன்றாடம் நாம் பார்க்கும் நிகழ்வுகள்.

கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரால் கைவிடப்பட்டோர் போன்றோரை தூய அந்தோனியாருக்கு விலைக்கு விற்று வாங்குகின்றனர். தூய அந்தோனியாருக்கு விற்கும் போது அந்த நபர் தூய அந்தோனியாரின் அருளையும், அவரின் பரிந்துரையையும் சிறப்பாக பெறுகின்றனர். அவர்களின் நோய் நீங்குகிறது. மருத்துவரால் கைவிடப்பட்டோர் தூய அந்தோனியாரால் கைவிடப்படுவதில்லை.

மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தையும் தூய அந்தோனியாருக்கு விற்கின்றனர்;. இப்படி குடும்பத்தை தூய அந்தோனியாருக்கு விற்கும் போது குடும்பத்தின் கஷ்டம், கவலைகளெல்லாம் மறைந்து போகிறது என்பதே உண்மை.