திருத்தலத்தில் தங்குதல்

Home >  Stay With Saint

மனப்பயத்தினால் பாதிக்கப்பட்டோர், தன்னம்பிக்கையின்மையால் பாதிக்கப்பட்டோர் மற்றும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டோர் அனைவரும் தூய அந்தோனியார் ஆலயத்தில் தங்குகின்றனர். அவர்கள் ஆலயத்தில் தங்கியிருக்கும்போது, திருத்தலத்தில் நடைபெறும் பக்தி வழிபாடுகளில் சிறப்பாக பங்கேற்று தூய அந்தோனியாரிடம் தங்களை ஒப்படைக்கிறார்கள். தூய அந்தோனியாரும் அவர்களுக்காக கடவுளிடம் பரிந்து பேசி புதுமைகள் புரிகிறார். ஏராளமான மக்கள் குணம் பெற்று செல்வதை கண்கூடாக பார்க்கலாம்.

தூய அந்தோனியாரின் புதுமைகளை நினைவில் வைத்து 13 நாட்கள் தங்கி செபிக்கும் மக்கள் அதிகமாக இருக்கின்றனர். 13 நாட்களுக்குள் தூய அந்தோனியார் எனக்கு குணம் தருவார் என்று நம்புகின்றனர், விடுதலை பெறுகின்றனர்.

ஒரு சிலர் 41 நாட்கள் ஆலயத்தில் தங்கியிருக்கின்றனர். இன்னும் சிலர் 3 மாதம் அதாவது 90 நாட்கள் ஆலயத்தில் தங்கியிருக்கின்றனர். இவ்வாறு தங்கியிருக்கும் போது தங்களுடைய நோய் குணமாகிறது என்று நம்புகின்றனர்.