ஒப்புறவு அருள்சாதனம்

Home >  Spiritual Direction >  Confession

தூய அந்தோனியார் திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள், அவர்களின் வருகையை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி ஒப்புறவு அருள்சாதம் பெற வழியுறுத்துகிறோம். இங்கு வருவது பொருள் நிறைந்த ஒரு திருப்பயணமாக இருக்க வேண்டும். வெறும் பயணமாகவோ ஒரு நேரப் போக்கிற்கான சுற்றுலாவாகவோ இருக்க கூடாது. ஆகவே பக்தர்கள் தங்கள் ஆன்மீக கடமைகளை உணர்ந்து அதற்கான ஆன்மீக செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு தூய அந்தோனியாரின் ஆசீரைப் பெற வேண்டும்.

ஒப்புறவு அருள்சாதனம் தூய அந்தோனியார் திருத்தலத்திற்கு வரும் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் ஒப்புறவு அருள்சாதனமும் ஆன்மீக வழ்காட்டுதலும் வழங்கப்பட்டு கொண்டு இருக்கின்றன. கத்தோலிக்க கிறித்தவத்தில் அருள்சாதனங்கள் வாயிலாக இறைவனின் கொடைகளையும், அருளையும் பெறுகிறோம். ஒவ்வொரு அருள்சாதனமும் இறைவனின் கொடைகளை பெற நாம் கொண்டாடும் பொருள் நிறைந்த ஒரு வழிபாடாகும் மேலும் அது ஒரு அருள் நிறைந்த நிகழவுமாகும். அதன் அடிப்படையில் திருத்தலம் நமது திருத்தலம் “தூய அந்தோனியார் வழியாக இயேசுவிடம்” என்ற இலக்கோடு பயணம் செய்கிறது. எனவே இங்கு வருகின்ற எண்ணற்ற பக்தர்களுக்கு அருள் சாதனங்கள் வழியாக இறைவனின் அருளை பெற்றுத் தர எல்லா வழிகளிலும் உதவிட ஆவண செய்யப்படுகிறது