ஆலயத்தின் தூயவர் --- குப்பக்குறிச்சி தூய யோவான்
கத்தோலிக்க மக்கள் --- 421
மறை வரலாறு
இவ்வூர் மக்கள் தாமிரபரணி ஆற்றின் அருகில் இருந்த படித்தரை மங்கலம் என்ற பகுதியில் இருந்து, அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் குப்பக்குறிச்சியில் குடிபெயாந்தவர்கள். 70 ஆண்டுகளுக்கு முன்னே சுற்றிலும் இருந்த உயர் சாதி என்றவர்களின் கொடுமைக்கு ஆளாகி விடுதலைத் தேடி கத்தோலிக்க கிறித்தவத்திற்கு மன மாற்றம் பெற்றாhகள். இவாகளின் மனமாற்றத்திற்கு பெரும் பங்கு புரிந்தவர்கள் ஜரோப்பிய நாட்டு பணியாளர் லைசு மற்றும் திரு இதய சகோதரர்கள் தேவசகாயம் மற்றும் அனுசியார் இன்றும் மக்களின் நெஞ்சத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். பாளை பேராலயப் பணியாளராக இருந்த பணி. லைசு, திண்டுக்ல் குயவன் நாயக்கன்பட்டி அந்தோணிமுத்து என்பரை குப்பக்குறிச்சியில் தங்க வைத்து மக்களின் மன மாற்றத்திற்கு அணியம் செய்திருக்கிறார். கோவிலின் வளாகத்திலேயே திரு. அந்தோனிமுத்து ஆசிரியர் அவர்களின் கல்லறை இன்றும் இருக்கின்றது. பாளை பேராலயப் பணியாளர் பணி. டேனியல் கட்டிய கோவிலை பணி. சந்தியாகு, பணி. அந்தோனி சேவியர் காலத்தில் புதுபித்திருக்கிறார்கள். புதிபிக்கப் பட்ட கோவிலை பாளை ஆயர் மேதகு ஆயர் இருதயராசு வழிபாட்டிற்கு அருள்பொழிவு செய்திருக்கிறார்கள்.
அத்தணை கிளை பங்குத்தளங்களிலும் மிகச் சிறப்பாக எல்லா ஆன்மீக நிகழ்வுகளும் நடந்துக் கொண்டிருக்கின்றன. சிறுவர்களுக்கான ஞாயிறு வகுப்புகள், இளைஞர் பாசறை, கலைகள் கற்பித்தல், மறைக்கல்வி வகுப்புகள் சிறப்பாக நடந்துக் கொண்டிருக்கின்றன.