ஆலயத்தின் தூயவர் --- புனித அந்தோனியார்
கத்தோலிக்க மக்கள் --- 237
மறை வரலாறு
இவ்வூர் மக்கள் இந்துக்களாக இருந்த போது புங்கமுடையார் எந்த தெய்வத்தை வழிபட்ட காரணத்தால் தங்கள் ஊரை புங்கம்பச்சேரி என்று அழைத்துக் கொண்டனர். இன்று புங்கனூர் என்று அழைக்கப்படுகிறது.
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் வாந்தி பேதி (காலரா) நோய் ஊரில் பல மக்களை பலி கொண்டது. அதைக் கண்ட இரண்டு கிறித்தவக் குடும்பத்தினர் ஒரு குடிசைக் கோவில் கட்டி தூய அந்தோனியார் திரு உருவத்தை வைத்து ஊருக்காகச் செபித்திருக்கிறார்கள். தொற்று நோயும் மறைந்தது. இந்த தாக்கம்தான் ஊர் மக்கள் அனைவரும் கிறித்தவத்தைத் தழுவக் காரணமாய் அமைந்தது.
குடிசைக் கோவிலில் இருந்த அந்தோனியாருக்கு 1947இல் ஊருக்குள் இருக்கம் பழைய கோவிலலை மக்களே கட்டி நேர்ந்தளித்திருக்கிறார்கள். அருள்பணி. அருளானந்தம் கோவிலை ஒட்டி முன்னே மண்டபம் ஒன்றைக் கட்டி கொடுத்திருக்கிறார். 1991ஆம் ஆண்டில் அருள்பணி. ஞானப்பிரகாசம் ஊருக்கு மேற்கே விரிவான இடத்தில் பெரிய புதிய கோவிலுக்கு அடித்தளமிட்டு, பங்கை விட்டு மாறிய பின்னும் தான் தொடங்கிய கோவில் கட்டுமானப் பணியை தானே முன்னின்று முடித்திருக்கிறார். 04.07.1993 இல் அருள்பணி. சந்தியாகு நேர்ந்தளிப்பு விழாவை நடத்தினார். பழைய கோவிலும் அப்படியே இருக்கிறது. இவாகளது விசுவாச வாழ்வின் தொடக்கத்தின் சின்னமாக இருக்கிறது.
இந்த ஊரின் பாசனப் பகுதியில் தான் திருத்தலத்திற்கு சொந்தமான விவசாய நிலங்கள் நஞ்சை 1¾ ஏக்கர், புஞ்சை 8½ இருக்கின்றன. இதனை இவ்வூர் மக்களில் ஒருவர் பராமரித்து வருகிறார்.
அத்தணை கிளை பங்குத்தளங்களிலும் மிகச் சிறப்பாக எல்லா ஆன்மீக நிகழ்வுகளும் நடந்துக் கொண்டிருக்கின்றன. சிறுவர்களுக்கான ஞாயிறு வகுப்புகள், இளைஞர் பாசறை, கலைகள் கற்பித்தல், மறைக்கல்வி வகுப்புகள் சிறப்பாக நடந்துக் கொண்டிருக்கின்றன.