ஆலயம் சுற்றுதல் : ஆலயம் சுற்றுவதன் நோக்கம் என்னவென்ற ல் ஒரே மனதாக ஓரே சிந்தனையுடன் தூய அந்தோனியாரை நினைத்து ஆலயத்தை சுற்றி வரம்போது மனதில் தீய எண்ணங்கள் மறைந்து நலல எண்ணங்கள் எப்போதும் நிலைத்து நிற்கும். இதற்கு தூய அந்தோனியார் துணை புரிவார்.
ஆலயத்தை 13 முறை சு ற்றி வருகின்றனர். ஒரு முறை சுற்றும் போது ஏறத்தாழ 100 மீட்டர் தொலைவு நடக்கின்றனர். 13 முறை சுற்றும் போது அவர்கள் 1 கீலோ மீட்டருக்கும் அதிக மான தொலைவு நடக்கின்றனர். அதிகமான தூரம் நடந்து நம்முடைய நண்பரை சந்திக்கும் போது ஏற்படும் ஏற்படும் மகிழ்ச்சிக்கு இது ஒப்பானது. ஆலயத்தை சுற்நி விட்டு ஆலயத்திற்துச் சென்று வழிபடுவது மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது என்று பக்தர்கள் பலர் கூறியிருக்கின்றனர்.
தீராத நோயுள்ளவர்கள் புதுமை கிணற்றில் 13 வாளி தண்ணீர் இறைத்து குளித்த பின்பு ஆலயத்தை சுற்றி வந்தால் நோய் நீங்கும். தீய ஆவிகள் விலகி போகும் என்ற ஆழமான நம்பிக்கையின் அடிப்படையில் மக்கள் ஏராளமான புதுமைகள் பெற்று வருகின்றனர். நம்பி வந்தோரை தூய அந்தோனியாரும் ஏமாற்றுவதில்லை. நம்பினோருக்கு எல்லாம் கைகூடும்.