பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளோரும் அந்தோனியாருக்கு உணவு படைத்து, அந்த உணவை பிறருக்கு பகிர்ந்து கொடுக்க ஆசைப்படுகின்றனர். எனவே அவர்கள் பிச்சை எடுத்தாவது அந்தோனியாருக்கு உணவு படைக்க வேண்டும் என்ற ஆழமான நம்பிக்கையினால் உந்தப்பட்டு, பிச்சை எடுத்து அந்தோனியாருக்கு உணவு படைத்து, பிறருக்கு உணவு தருகின்றனர்.
பொருளாதாரத்தில் நல்ல தரத்தில் உள்ளோர்களும், பிச்சை எடுத்து, அதன் மூலம் வருகின்ற பணத்தின் மூலம் புளியம்பட்டி வந்து செபிப்பதை ஒரு வரப்பிரசாதமாக கருதுகின்றனர்.
மெழுகுதிரி பற்றவைத்தல்
தூய அந்தோனியரின் மீது பற்று கொண்ட பிற மத சகோதரர்கள்.... குறிப்பாக இந்து சகோதரர்கள் ஆரம்பித்த பக்தி முயற்சி இதுவாகும். மெழுகுதிரி பற்றவைத்து சாமி கும்பிடுவது அவர்களின் வழக்கம். இங்கிருந்து உருவானதே மெழுகுதிரி பற்ற வைத்து தூய அந்தோனியாரை வழிபடும் பக்தி முயற்சி.
மெழுகுதிரிகளை ஏற்றி வைத்து தூய அந்தோனியாரை வழிபடும் போது.... அந்தோனியாரின் சிறப்பான பரிந்துரையை பெறுகின்றனர்.... நான் என்னையே முழுமையாக உன்னிடம் தருகிறேன் என்பதன் வெளி அடையாளமே இந்த மெழுகுதிரிகளை ஏற்றி செபிக்கும் பக்தி முயற்சி. தூய அந்தோனியாரிடம் நம்மை முழுமையாக ஒப்படைக்கும்போது தூய அந்தோனியார் நம்மை பாதுகாத்துக் கொள்வார். இதுதான் உண்மை.