உடல் உறுப்புகளில் எந்த உறுப்பில் குறை இருக்கிறதோ அந்த பொருளை தூய அந்தோனியாருக்கு காணிக்கையாக செலுத்தினால்..... அந்த உறுப்பு குணம் பெறும்.
கை, கால், கண், மார்பு, இதயம், போன்ற உறுப்புகளில் குறை இருந்தால் அந்த உறுப்பை வாங்கி காணிக்கை பெட்டியில் போடுவது வழக்கம்.
குழந்தைக்கு ஏதாவது நோய் இருந்தால், குழந்தை போன்ற வெள்ளிப் பொருளை வாங்கி காணிக்கை செலுத்துவர்.
பூச்சியினங்களால் தொல்லை இருந்தால் பாம்பு, பல்லி போன்ற வெள்ளிபொருட்களை காணிக்கையாக செலுத்துவர்.
வயிற்றில் கட்டி இருந்தால், கட்டி போன்ற வெள்ளிப் பொருளான குண்டை காணிக்கையாக செலுத்துவர்.
கணவன் - மனைவிக்கிடையில் பிரச்சனையிருந்தால்.... ஆண் - பெண் உருவம் பொறித்த வெள்ளிப் பொருளை காணிக்கையாக கொடுப்பர்.