இது அசனம் கொடுப்பதின் இன்னொரு வகையாகும். தீராத நோயினால் அவதிப்படுவோர் தங்களின் நோய் தீர வேண்டுமென்பதற்காக ஏழைகளுக்கு பட்டை சோறு கொடுக்கின்றனர். அதைப்போல தீராத நோயினால் அவதிப்பட்டு, தூய அந்தோனியாரின் வழியாக குணம் பெற்றவர்கள் தங்களின் நன்றியை ஏழைகளுக்கு பட்டைச் சோறு வழங்குவதன் மூலம் தெரிவிக்கின்றனர். தூய அந்தோனியாரின் 13 புதுமைகளை நினைவு கூர்ந்து, 13 பேருக்கு ஓலைப்பாயில் வைத்து பட்டைச்சோறு கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது
தானியம் மந்திரித்தல்
விளைச்சலின் தானியங்களை எடுத்து வந்து, புனித அந்தோனியாரின் ஆலயத்தில் மந்திரித்து, அந்த தானியங்களையே விதை தானியமாக மாற்றி பயிரிடும் போது, விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இதுவரை இந்த நம்பிக்கை பொய்யாக போனதில்லை. விளைச்சலின் முதற்பகுதியை தூய அந்தோனியாருக்கு காணிக்கையாகவும் செலுத்துகின்றனர்.