அறிவிப்புகள்

Home >  Instruction About Puliampatti Shrine

Instructions

அன்பிற்கினிய தூய அந்தோணியார் பக்தர்களே!

உங்களை இத்திருத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம். உங்களின் வேண்டுதல்கள் நிறைவேற உங்களுக்காக செபிக்கிறோம். நலம் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்பர்களே நீங்கள் வந்துள்ள இடம் ஒரு தூய திருத்தலம். ஆகவே இத்திருத்தலத்திற்கு உரிய மரியாதையையும் பக்தியையும் தர வேண்டுகிறோம். நீங்கள் திருப்பயணிகள் என்ற உணர்வோடு செயல்பட கேட்டுக் கொள்கிறோம்.

நடைபாதைகளையும் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள். உங்களின் தேவைகளுக்கு திருத்தல பணியாளர்களை அணுகவும்.

தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாக செலவிடுங்கள். கழிப்பறைகளை போதிய தண்ணீர் ஊற்றி பயன்படுத்துங்கள். குப்பைகளை கண்ட இடங்களிலும் கொட்டாமல், அதற்குரிய தொட்டிகளில் கொட்டுங்கள். மொட்டை போடுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகம் கொடுக்க வேண்டாம.;

திருத்தலம்

திருத்தல நுழைவு வாயிலில் வியாபாரம் செய்ய அனுமதி இல்லை. நுழை வாயிலை அடைத்துக் கொண்டு நிற்கவோ, அமரவோ வேண்டாம். கனரக ஊர்திகள், இருச்சக்கர வாகனங்கள், நான்க சக்கர வாகனங்களை திருத்தல வளாகத்திற்குள் கொண்டு வர வேண்டாம். வாயிலில் நிற்கும் பணியாளர்கள் சொல்படி செய்ய கேட்டுக் கொள்கிறோம்.
திருத்தலத்திற்குள் அமர்ந்து செபிப்பவர்கள்; பேசிக்கொண்டிருக்க வேண்டாம். பக்தர்கள் தங்கள் அலைபேசிகளை அணைத்து விட வேண்டும். திருத்தலத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. தூய அந்தோணியாருக்கு மாலை போடும் பக்தர்;கள் அங்கு நிற்கும் பணியாளர் உதவியோடு செய்ய வேண்டுகிறோம். திருத்தல பீடத்திற்குள் செல்ல அனுமதி இல்லை. திருத்தலத்திற்குள் படுக்க கூடாது. திருத்தலதிற்குள் சிறு பிள்ளைகளை விளையாட அனுமதிக்க வேண்டாம். பிற பக்தர்கள் அமைதியாக செபிக்க உதவுங்கள்.

ஆராதனை மண்டபம்

ஆராதனை மண்டபத்தில் படுத்து உறங்கக் கூடாது. பேசிக் கொண்டிருக்கவும் கூடாது. புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. அமைதியாக உட்கார்ந்து செபிக்க ஆராதனை மண்டபம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவும். அலைபேசிகளை பயன்படுத்த வேண்டாம்.

ஒப்புறவு அருள்சாதனம்

அன்பர்களே, நமது திருத்தலத்தில் எப்போதும் பாவசங்கீர்தனம் செய்து கொள்ள உங்களுக்காக அருள்பணியாளர்கள் இருக்கிறார்கள். திருத்தலத்திலும் பங்குத்தந்தையர் இல்லத்திலும் அருள்பணியாளர்கள் இருக்கிறார்கள். நீங்கள் இத்திருத்தலத்திற்கு வந்திருக்கிறீர்கள் என்றால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து திருப்பலியில் பங்குகொள்ளுங்கள். (செவ்வாய்) அன்பர்களே! இத்தியான மண்டபத்தின் வலதுபுறத்திலும், திருத்தலத்திலும், பங்குத்தந்தையர் இல்லத்திலும் அருள்பணியாளர்கள் பாவசங்கீர்தனம் செய்ய உங்களுக்காக இருக்கிறார்கள். ஆகவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தியான மண்டபம்

தியான மண்டபத்தை செபிக்கவும் தியானிக்கவும் பயன்படுத்துங்கள். தூங்கவும், விளையாடவும் பயன்படுத்தாதீர்கள். உங்கள் குழந்தைகள் தியான மண்டபத்தில் அசுத்தம் செய்ய நேர்ந்தால் உடனே தண்ணீர் விட்டு கழுவி விடுங்கள். உங்களுடைய பொருட்களை அப்புறப்டுத்தி வையுங்கள். தியான மண்டபத்தில் உணவு உண்ணாதீர்கள்.

(செவ்வாய்) தன்னார்வ தொண்டர்கள் சுத்தம் செய்யும் போது உங்கள் பொருட்களை அப்புறப்டுத்தி உதவுங்கள். சரியாக 11. 45 மணிக்கு தூய அந்தோணியார் நவநாள் செபமும் அதனைத் தொடர்ந்து திருப்பலியும் இத்தியான மண்டபத்தில் நடைபெறும்.

திருப்பலி கருத்து கொடுக்க விரும்புபவர்கள் திருத்தல அங்காடிக்கு அருகில் இருக்கும் சகோதரிகளிடம் பதிவு செய்து கொள்ளுங்கள்.

கோடி அற்புதர் மாத இதழ்

அன்பர்களே இத்திருத்தலத்திலிருந்து கோடி அற்புதர் என்ற மாத இதழ் ஒன்று வெளிவருகிறது. இந்த இதழில் தூய அந்தோணியார் உங்கள் வாழ்வில் செய்து வரும் புதுமைகளை, அற்புதங்களை வெளியிடுகிறோம். அவ்வாறு தங்கள் வாழ்வில் தூய அந்தோணியார் மூலம் பெற்றுக்கொண்ட அற்புதங்களை பகிர்ந்து கொள்ள விரும்புபவர்கள் அந்த தரவுகளை எழுதி முழு முகவரியோடு பங்குத் தந்தையிடம் தர வேண்டுகிறோம்.

கோடி அற்புதர் உங்கள் இல்லத்திற்கும் வர வேண்டுமானால் அதற்குரிய சந்தா உருவா 60 ஐ செலுத்தி உங்கள் முகவரியை பதிவு செய்து கொள்ளுங்கள்.

சேவை இல்லங்கள்

இத்திருத்தலத்தின் பராமரிப்பில் தூய அந்தோணியார் கருணை இல்லமும், பதுவா முதியோர் இல்லமும் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த இல்லங்களுக்கு நீங்கள் உதவி செய்ய விரும்பினால் பங்குத் தந்தையை அணுக வேண்டுகிறோம்.

இத்திருத்தலத்தில் அண்மையில் என்றும் என்னுடன் மற்றும் புதுமைப் புனிதர் ஆP3 என்ற இசை குறுந்தகடுகளை வெளியிட்டிருக்கிறோம். இந்த ஆP3 ஒலிப்பேழையில் பக்தர்கள் நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற்ற 70 அந்தோணியார் புகழ் பாடல்களை பதிவு செய்திருக்கிறோம். திருத்தல அங்காடியில் வாங்கி பயன் பெறுங்கள்.

நம்புங்கள் செபியுங்கள் நல்லது நடக்கும்! நலம் பெற்று திரும்ப வாழ்த்துகிறோம்!

திருத்தல அருள்பணியாளர் தூய அந்தோணியார் திருத்தலம் புளியம்பட்டி – 628 303

ஞாயிறு அறிவிப்புக்கள்

இவ்வாரத்திலும் வழக்கமான வழிபாடுகள் எல்லாம் திருத்தலத்தில் நடைபெறும்.

அன்பர்களே இத்திருத்தலத்திலிருந்து கோடி அற்புதர் என்ற மாத இதழ் ஒன்று வெளிவருகிறது. இந்த இதழில் தூய அந்தோணியார் உங்கள் வாழ்வில் செய்து வரும் புதுமைகளை, அற்புதங்களை வெளியிடுகிறோம். அவ்வாறு தங்கள் வாழ்வில் தூய அந்தோணியார் மூலம் பெற்றுக்கொண்ட அற்புதங்களை பகிர்ந்து கொள்ள விரும்புபவர்கள் அந்த தரவுகளை எழுதி முழு முகவரியோடு பங்குத் தந்தையிடம் தர வேண்டுகிறோம்.

கோடி அற்புதர் உங்கள் இல்லத்திற்கும் வர வேண்டுமானால் அதற்குரிய சந்தா உருவா 60 ஐ செலுத்தி உங்கள் முகவரியை பதிவு செய்து கொள்ளுங்கள்.

இத்திருத்தலத்தின் பராமரிப்பில் தூய அந்தோணியார் கருணை இல்லமும், பதுவா முதியோர் இல்லமும் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த இல்லங்களுக்கு நீங்கள் உதவி செய்ய விரும்பினால் உங்களை அன்போடு வரவேற்கிறோம். இத்திருத்தலத்தில் அண்மையில் என்றும் என்னுடன் மற்றும் புதுமைப் புனிதர் ஆP3 என்ற இசை குறுந்தகடுகளை வெளியிட்டிருக்கிறோம். இந்த ஆP3 ஒலிப்பேழையில் பக்தர்கள் நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற்ற 70 அந்தோணியார் புகழ் பாடல்களை பதிவு செய்திருக்கிறோம். திருத்தல அங்காடியில் வாங்கி பயன் பெறுங்கள்.