மடத்துப்பட்டி

Home >  Madathuppatti Substation

St.antony-s shrine

ஆலயத்தின் தூயவர் --- புனித செபசுதியார்
கத்தோலிக்க மக்கள் ---    132

மறை வரலாறு

இங்கு பல பிரிவு மக்கள் இன்று இணைந்து வாழ்ந்தாலும், ஒரு காலத்தில் உயர்குடி மக்கள் என்று கூறிக் கொண்டவர்களின் கொடுமையிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக பலர் தென்னிந்திய திருச்சபையிலும் சிலர் கத்தோலிக்கத் திருச்சபையிலும் சேர்த்துக்கொண்டனர்.

கத்தோலிக்க கிறித்தவர்கள் தூய செபசதியாரைத் தங்கள் பாதுகாவலராக ஒரு குடிசைக் கோவிலில் வைத்துக் கும்பிட்டனர். 1920 வாக்கில் பன்னீர்குளம் பங்கு அருள்பணியாளர் ஒரு கற்கோவிலை கட்டித்த தந்திருக்கிறாhகள். பல ஆண்டுகளுக்கு முன்னே அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக கோவில் பழுதடைந்து பின் உருகுலைந்தது. புதிய கோவில் வேண்டும் என்ற இவாகளது கனவும் விடாமுயற்சியும் அருள்பணி. லூர்துராசு பணிசெய்த காலத்தில் பலன் தந்தது. 11.09.2001 இல் மேதகு பாளை ஆயர் சூடு பால்ராசு அடிக்கல் நாட்டி 20.04.2002 இல் வழிபாட்டுக்கு அருள்பொழிவுச் செய்தார்.

இம்மக்கள் பல சாதி கலவரத்திற்கு மத்தியில் வாழ்ந்தாலும். ஆழமான விசுவாச வாழ்லை கொண்டிருக்கின்றனர்.

அத்தணை கிளை பங்குத்தளங்களிலும் மிகச் சிறப்பாக எல்லா ஆன்மீக நிகழ்வுகளும் நடந்துக் கொண்டிருக்கின்றன. சிறுவர்களுக்கான ஞாயிறு வகுப்புகள், இளைஞர் பாசறை, கலைகள் கற்பித்தல், மறைக்கல்வி வகுப்புகள் சிறப்பாக நடந்துக் கொண்டிருக்கின்றன.